யார் இந்த ‘இரணதீரன் பாண்டியன்’- ‘யாத்திசை’ படத்தின் இயக்குநர் விளக்கம்.

photo

சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் பீரியாடிக் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. இத்திரைப்படம்  ஏழாம்  நூற்றாண்டில் வாழ்ந்த ரண­தீ­ரன் பாண்­டி­யன் என்ற மன்­­னுக்­கும்எயினர்கள் எனப்­படும் பழங்­குடி மக்களுக்கும் இடையே நடந்த போராட்­டத்­தின் அடிப்­­டை­யில் உரு­வாக்­கப்­பட்டுள்­ளது.

photo

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தை இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார்சக்ரவர்த்தி இசைமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை யதிசாய் அகிலேஷ் காத்தமுத்து மேற்கொண்டுள்ளார்இப்படத்தில் சேயோன், சக்தி மித்ரன், சுபத்ரா, ராஜலக்ஷ்மி, சமர், செம்மலர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

photo

இந்த படத்தில் யார் இந்த இரணதீரன் பாண்டியன்? என்பது குறித்து படத்தின் இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது “ சோழர்களுள் எப்படி ராஜராஜ சோழன் முக்கியமான அரசனோ அதேப்போல இடைக்கால பாண்டிய அரசர்களுள் முக்கியமானவர் இரணதீரன், கிபி 670 முதல் -710 வரை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார். ஆனால் பொது வெளியில் சோழர்கள் பற்றிய புரிதல் மக்களிடத்தில் இருக்கும் அளவிற்கு பாண்டியர்கள் பற்றி இல்லை; பாண்டிய அரசுதான் தமிழகத்தின் தொல்குடி, அதிலிருந்து வந்ததுதான் மற்ற அரசுகள். வேள்விகுடி செப்பேடுகள் இரணதீரன் குறித்து முக உயரிய நிலையில் பேசுகின்றன, குறிப்பாக தோல்வியே இல்லாத அரசன்” என நாம் அறியாத பல தகவல்கள் படத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


 

Share this story