'எமகாதகி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள 'எமகாதகி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'எமகாதகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Some stories refuse to stay buried… and this one is ready to rise. The truth reveals itself on the 7th of March. Are you ready? 👁️🔥 #Yamakaathaghi @RoopaKoduvayur @NPoffl @kailasam_geetha @venkatrahul_J@srinivasjalakam @GanapathiReddy_ @YeshwaPictures @naisatmedia pic.twitter.com/kfo9ZkrXmz
— Yeshwa Pictures (@YeshwaPictures) February 15, 2025
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் 7-ந் தேதி இப்படம் வெளியாக உள்ளது.