யம்மாடி.. ‘மன்மதன்.. ஹேய் மன்மதன்’ - யுவன் மேடையில் அரங்கை அதிர வைத்த சிம்பு..

simbu


மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில், தனது வசீகரிக்கும் குரலாலும், அசத்தல் நடனத்தாலும் நடிகர் சிம்பு அரங்கையே  அதிரவைத்திருக்கிறார்.


நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளார் என தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் நடிகர் சிம்பு.  பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சிம்புவவை , சர்ச்சைகளும் பிந்தொடர்ந்தன.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான மாநாடு சிறந்த கம்பேக்காக அமைந்தது. அதன்பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள்  நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது.  தற்போது சிம்புவின்  கதைத்தேர்வுகளில்  நல்ல முதிர்ச்சி காணப்படுகிறது.


புது உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் காணப்படும் எஸ்.டி.ஆரை  திரையில் கண்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி  இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு (STR 48) கமிட்டாகியுள்ளார்.  இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்தக் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரலாற்று பின்னணியுடன் உருவாகவுள்ள இந்தப்  படத்திற்காக நீண்ட தலை முடியையும் வளர்த்து, சிம்பு புது லுக்கில் தோன்றுகிறார்.


இந்த நிலையில் தற்போது சிம்பு மலேசியாவில் நடைபெற்று வரும்  High On U1 என்னும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிம்புவும், யுவனும் சேர்ந்து பல பாடல்களை பாடியுள்ளனர். முன்னதாக இசை நிகழ்ச்சிக்கு வந்த சிம்புவிற்கு, ரசிகர்கள் மிகச்சிறப்பான வரவேற்பை அளித்தனர்.


தான் பாடிய ‘தத்தை.. தத்தை.. தத்தை..  மன்மதன்’, ‘லூசுப் பெண்ணே’உள்ளிட்ட பல பாடல்களை பாடிய அவர், தந்தை டி.ஆர் பாடிய ‘யம்மாடி.. ஆத்தாடி’ பாடலை பாடி அசத்தலான நடனமும் ஆடியது ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்தது. யுவனின் இசை மேடையில் ‘மன்மதன்.. மன்மதன்..’ என அரங்கையே அதிர வைத்தார் சிம்பு..


 

Share this story