"இந்திய திரையுலகை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்லும் இப்படம்" -யஷ் கூறும் படம் இது
நிதேஷ் திவாரி 2 பாகங்களாக இயக்கியுள்ள பன்மொழி படமான ‘ராமாயணா’, சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார். அப்படி என்றால், ‘இப்படம் எப்படி இவ்வளவு பெரிய தொகையை வசூலித்து லாபம் சம்பாதிக்கும்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த யஷ், ‘4,000 கோடி ரூபாய் என்பது ‘ராமாயணா: பாகம் 1’ படத்துக்கான பட்ஜெட் மட்டும் கிடையாது. இதை எல்லோரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர். 2 பாகங்களையும் சேர்த்துதான் 4,000 கோடி ரூபாய் தயாரிப்பு செலவு மற்றும் விளம்பரத்துக்கான செலவு.
ஹாலிவுட்டில் படத்தின் தயாரிப்பு செலவுக்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உலகம் முழுக்க விளம்பரம் செய்ய செலவழிப்பார்கள். காரணம், அப்படம் உலக சந்தையை குறிவைக்கிறது. அதுபோலவே ‘ராமாயணா’ படத்துக்கும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் வருவாய் உலகளாவிய அளவில் இருக்கும். நாம் முயற்சிக்காவிட்டால், வேறு யாராவது இதை செய்துவிடுவார்கள். ‘ராமாயணா’, ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ ஆகிய படங்கள் இந்திய திரையுலகை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்வதற்கான தீவிர முயற்சி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்

