மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் யஷ் -எந்த படம் தெரியுமா ?

yash

மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் யஷ் மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா நடித்துள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்து வருகிறது.  ஐதராபாத்திலுள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் யஷ்ஷை நேரில் பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிவில் ரசிகர்களிடம் யஷ் உரையாடினார்.
அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் சிலர், உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜே ஸ்பீக்கரை தாங்கும் சாளரம் மீது போட்டி போட்டு ஏறினர். அப்போது, ஸ்பீக்கருடன் ஒட்டுமொத்த சாளரமும் சரிந்து கீழே விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், மாணவர் ஒருவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. மற்ற மூவரும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

Share this story