அந்த தகவலில் உண்மையில்லை - யாஷிகா குறித்து அவரது தாய் கருத்து !

Yashika

 நடிகை யாஷிகா ஆனந்த் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில படங்களில் நடித்தபோதிலும் குறுகிய காலத்தில் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானார். 

Yashika

பிசியான நடிகையாக இருந்த யாஷிகா, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈசிஆர் சாலையில் சென்னை வந்துக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் உயிர் தோழி வள்ளி ஷெட்டி பவானி மரணமடைந்தார். பலத்த காயமடைந்த யாஷிகா சில மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார். தற்போது பழைய நிலைமைக்கு மாறியுள்ள புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

இந்நிலையில் அஜித்தின் மைத்துனர் நடிகர் ரிச்சர்ட் ரிஷியை, நடிகை யாஷிகா காதலிப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.  வருகிறது. இதை நிரூபிக்கும் விதமாக சமீபகாலமாக ரிச்சர்ட் ரிஷியுடன் யாஷிகா இருக்கும் நெருக்கமாக புகைப்படங்கள்  வெளியானது.‌ தற்போது இந்த தகவலை நடிகை யாஷிகாவின் தாய் மறுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரிச்சர்ட் ரிஷி - யாஷிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள். அந்த படம் வெளியாகும் போது அனைவருக்கும் உண்மை தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். 

 

Share this story