மிஸ்டரி த்ரில்லரில் நடிக்கும் யாஷிகா ஆனந்த்..
1730619628000
‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கிய முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா, அடுத்து இயக்கும் படத்தில் யாஷிகா ஆனந்த், கதாநாயகியாக நடிக்கிறார்.
மருத்துவரான ராம் பிரசாத் நாயகனாக நடிக்கிறார். மிஸ்டரி த்ரில்லர் கதையம்சம் கொண்ட இதில், இருவரும் மருத்துவர்களாக நடிக்கிறார்கள். டேவிட் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். விபின் ஆர் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. டுவிங்கிள் லேப்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.