24 மணி நேரத்தில் நடக்கும் திகில் சம்பவம்... யாஷிகாவின் ‘சைத்ரா’ டிரெய்லர் வெளியீடு !

chaithra

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்ரா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் அந்த திகில் படம் கதாநாயகியை முன்னிறுத்தி எடுக்கப்படும் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதுபோன்று உருவாகியுள்ள திரைப்படம் ‘சைத்ரா’. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

chaithra

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெனீத்குமார் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷிகாவுடன் இணைந்து அவிதேஜ், சக்தி மகேந்திரன், பூஜா, ரமணன், கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மெய்யப்பன் இசையமைத்துள்ளார். மார்ஸ் பிரொக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் பேயாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story