சமந்தா பட டிரெய்லரை வெளியிடும் 5 மொழி ஹீரோக்கள்... ‘யசோதா’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

yashoda

 சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் டிரெய்லரை 5 மொழி முன்னணி ஹீரோக்கள் வெளியிடவுள்ளனர். 

ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம்‘ யசோதா’. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்த படத்தில் கர்ப்பணி பெண்ணாக நடித்துள்ளார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனையே இப்படத்தின் கதைக்களம். இந்த படத்திற்காக இரத்தமும், வியர்வையும் சிந்தி சமந்தா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  

yashoda

இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. இப்படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.36 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரெய்லரை ஐந்து மொழிகளில் உள்ள முன்னணி ஹீரோக்கள் வெளியிடவுள்ளது. அதன்படி தமிழில் நடிகர் சூர்யாவும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், இந்தியில் வருண் தவான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் வெளியிடவுள்ளனர். முன்னணி ஹீரோக்கள் இந்த டிரெய்லரை வெளியிடவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story