யாஷ் நடிக்கும் 19-வது படத்தின் அறிவிப்பு

யாஷ் நடிக்கும் 19-வது படத்தின் அறிவிப்பு

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்று, ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் கன்னட நடிகர் யாஷ்.  இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் பல வாய்ப்புகள் வந்தும், அவர் தனது அடுத்தப் படத்தை அறிவிப்பதில் இன்னும் தாமதம் காட்டிவருகிறார். அடுத்ததாக யாஷின் , கே.ஜி.எஃப் 3 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  இந்நிலையில், அவர் நடிக்கும் 19-வது திரைப்படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

யாஷ் நடிக்கும் 19-வது படத்தின் அறிவிப்பு

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்திருந்த ‘நளதமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். இது தவிர மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர், இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த ’லயர்’ஸ் டைஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. கடைசியாக நிவின் பாலி நடிப்பில் ‘மூத்தோன்’ என்ற படத்தை அவர் இயக்கினார். இந்நிலையில், கேஜிஎஃப் புகழ் யஷ் நடிக்கும் 19-வது படத்தை கீது மோகன்தாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் அறிவிப்பு வரும் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 
 

Share this story