வளைகாப்பில் பாடல் பாடி அசத்திய சமந்தாவின் வீடியோ வெளியீடு.

PHOTO

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில்  வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்’ யசோதா’. இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் சமந்தா டூப் போடாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்றதுமே, படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதுமட்டுமல்ல சமந்தா உடலநலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூட படத்தின் டப்பிங் மற்றும்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்  கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தார். இதெல்லாம் சந்தாவின் தொழில் மீதுள்ள பேரன்பை காட்டியது.

photo

photo

அந்த வகையில் தற்பொழுத சமந்தாவின் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற 'யசோதா' படத்தில் இடம் பெற்ற ‘வளைகாப்பு’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

கோபிகா பூர்ணிமா பாடியிருக்கும் இந்த பாடலிற்கு எஸ் குமரன் வரிகள் எழுதியுள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Share this story