‘யசோதா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம்……..என்ன இவ்வளவா!........

photo

‘யசோதா’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

சமந்தா நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘யசோதா’ , இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

photo

வடகைத்தாய் கதைகளத்தை மைய்யமாக வைத்து  இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. “படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது, இடண்டாவது பாதி அல்ட்டிமேட்” என ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சண்டை காட்சிகளில் சமந்தா டூப்பே இல்லாமல் நடித்து இருக்கிறார். டப்பிங்கும் அவரே கொடுத்திருப்பது, படத்திற்கு பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.

photo

40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ,தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியான இப்படம், முதல் நாளில் 3.20 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

படத்திற்கு கிடைத்துள்ள நல்ல விமர்சனத்தால், வரவிருக்கும் நாட்களில் படத்தின் வசூல் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story