சரித்திர படமாக உருவாகியுள்ள ‘யாத்திசை’... அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு !

Yaathisai

சரித்திர படமாக உருவாகியுள்ள ‘யாத்திசை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. இந்த படத்தில் புதுமுகங்கள் ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, சமர், மின்னல் முரளி, செம்மலர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய இளவரசர் ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சக்ரவர்த்தி இசையமைப்பாளராகவும், யதிசாய், அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 

Yaathisai

 கடந்த ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரன் பாண்டியனுக்கும், எயினர்-கள் என அழைக்கப்படும் பழங்குடி கூட்டத்திற்கும் இடையே நடந்த போராட்டமே இந்த படத்தின் கதை. ‘நவகண்டம்’ என்று அழைக்கப்பட்ட தன்னைத்தானே பலி கொள்ளும் முறை, கொற்றவை பலி, தேவரடியாரின் வாழ்க்கை முறை உள்ளிட்ட குறித்து இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 


 

 

Share this story