யாத்ரா 2 படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
1704289611028

மறைந்த முன்னாள் முதல்வர் ஒய். எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’ இந்த படத்தில் ஒய்.எஸ். ஆர் கதாப்பாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதையும் முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 5-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.