ரிலீசுக்கு முன்பே இப்படியொரு அங்கீகாரமா?.... ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துக்கு குவியும் பாராட்டுகள்!
1702985658224
இயக்குநர் ராம் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’ இந்த படத்தில் மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார். இது இவரது இரண்டாவது தமிழ் படமாகும். இதற்கு முன்னர் நேரம் படத்தில் நடித்திருந்தார்.
இவருடன் இணைந்து நடிகை அஞ்சலி, நடிகர் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இது இவர்களது முதல் கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதாவது IFFR International Filam Festival Rotterdam நிகழ்வில் வெள்ளித்திரை படங்களுக்கான போட்டியில் ஏழு கடல் ஏழு மலை படம் தேர்வாகியுள்ளது. இதனை படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.