இயக்குனர் ராம் – நிவின்பாலி கூட்டணியின் ‘ஏழுகடல் ஏழுமலை’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு.

photo

ராம்- நிவின்பாலி கூட்டணியில் தயாராகிவரும் ‘ஏழுகடல் ஏழுமலை’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

photo

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகை அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் அப்டேட் ஒன்று வேளியாகியுள்ளது.


அதாவது படத்திற்காக நடிகர்கள் சூரி, நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஆகியோர் டப்பிங் பேசும் வீடியோவை வெளியிட்டு டப்பிங் பகுதி நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்காக மட்டும் படக்குழு கிட்டத்தட்ட 3 கோடி செலவு செய்துள்ளார்களாம். படத்தின் டப்பிங் போர்ஷன் முடிந்த நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  இதற்கு முன்னர் இயக்குநர் ராம் இயக்கிய கற்றதுதமிழ், தங்க மீன்கள், தரமணி அகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ராமிற்கான தனி இடத்தை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story