சூரிக்கும் எனக்கும் போட்டியா..? யோகிபாபு ஓபன் டாக்.. !

யோகி பாபு காமெடியனாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் ஹீரோவாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதே போல ரஜினி. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி டிராக்கில் பயணிக்கவும் யோகி பாபு தயக்கம் காட்டவில்லை.இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி யோகிபாபு -சிம்புதேவன் காம்பினேஷனில் உருவாகியுள்ள போட் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்று வரும் யோகி பாபு, தன்னுடைய படம் மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரசியமான விஷயங்களையும் பேசி வருகிறார்.
அந்த வகையில், போட் படத்திற்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் யோகி பாபு, சூரி குறித்தும் அவரது அசுர வளர்ச்சி குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார். தாங்கள் நடிக்க வந்த துவக்க காலத்திலேயே நண்பர்களாக பழகியதாகவும் தன்னுடைய மண்டேலா படம் பார்த்து சூரி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்ததாகவும் அதே போல விடுதலை மற்றும் கருடன் படங்களில் சூரியின் நடிப்பை பார்த்து தான் மிரண்டதாகவும் இதை தான் அவரிடம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் யோகி பாபு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனக்கும் சூரிக்கும் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு அப்படியெல்லாம் இல்லை என்றும் தாங்கள் தங்களது வளர்ச்சியை ஆரோக்கியமாக பார்ப்பதாகவும் யோகி பாபு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு முன்னேறிய தாங்கள், மற்றவர்களின் வளர்ச்சியை சிறப்பான கண்ணோட்டத்துடனேயே பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் சூரிக்கும் போட்டி என்பது டீக்கடையில் நேரத்தை போக்குவதற்காக பேசப்படும் பேச்சு என்றும் தான் சூரிக்காக கோயிலில் அர்ச்சனை செய்ததாகவும் யோகிபாபு சுட்டிக் காட்டியுள்ளார்.