'குட் பேட் அக்லி' படத்தில் யோகி பாபு !

yogi babu

நடிகர் யோகி பாபு மற்றும் அஜித் எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

yogi babu

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. பல்கேரியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.நடிகர் அஜித்தும் அவ்வப்போது ஒரு சில அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story