யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’... கலக்கலான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

yogibabu

 யோகிபாபு நடிக்கும் ‘லக்கிமேன்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வரும் யோகிபாபு, தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறது. அந்த வகையில் தூக்குத்துரை, வீரப்பன் கஜானா, மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் யோகிபாபு நடிப்பில் உருவாகும் படம் ‘லக்கி மேன்’. 

yogibabu

இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து பாலாஜி, வீரபாகு, அப்துல், ரைபல் ரபிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் சந்தீப் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.  

திங்க் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘L’ சிம்பிளுடன் யோகிபாபு நிற்கிறார். பின்புறம் ஒரு ‘எல்’ நபர் ஓட்டும் காரும், பின்புறம் போலீஸ் வண்டியும் உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

Share this story