திருச்செந்தூரில் திடீர் சந்திப்பு- கைக்குலுக்கி கொண்ட பிரபலங்கள்!

*திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு அட்டு திரைப்பட நடிகர் ரிஷி ரித்விக் சுவாமி தரிசனம்- அப்போது திடீரென்று வருகை தந்த பிரபல காமெடி நடிகர் யோகி பாபு வும், நடிகர் ரிஷி ரித்விக்கும் கைகுலுக்கியபடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் நலம் விசாரிப்பு.*
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கம் இதில் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்களும் திரையுலக பிரபலங்களும் வருகை தந்து முருகனை வழிபடுவர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திரை பிரபலங்களின் வருகையானது அதிகரித்து உள்ள நிலையில், இன்று அட்டு திரைப்படத்தில் அறிமுகமாகி, விருமன், டோலோ, காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரான ரிஷி ரித்விக் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது திடீரென்று திருச்செந்தூர் முருகனை வழிபடுவதற்காக வருகை தந்த பிரபல காமெடி நடிகரான யோகி பாபு கோவிலில் நின்று கொண்டிருந்த அட்டு திரைப்பட நடிகர் ரிஷி ரித்விக் யை கண்டதும் கைக் குலுக்கிய படி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நடிகர் ரிஷி ரித்விக் திருச்செந்தூர் முருகனை வழிபடுவதற்காக கோவிலுக்குள் சென்றடைந்தார். பின்னர் மூலவரான முருகனை வழிபட்டார், சண்முகர், பெருமாள்,வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்கார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று, அங்குள்ள தெய்வங்களையும் வணங்கி வழிபட்டார். நடிகர் ரிஷி ரித்விகிடமும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து திருச்செந்தூருக்கு படை எடுத்து வரும் திரை உலக பிரபலங்களால் திருச்செந்தூர் பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆரவார உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.