யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கையை தட்டுங்க' படத்தின் ட்ரைலர் ரிலீஸ்...

yogi babu

யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. 
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹிரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநிஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 



இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Share this story