விரைவில் வெளியாகும் யோகிபாபுவின் ‘யானை முகத்தான்’... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

YaanaiMugathaan

யோகிபாபு நடிப்பில் உருவாகும் ‘யானை முகத்தான்’ முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார் யோகிபாபு. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். காமெடி நடிகராக இருக்கும் அவர், தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது யோகிபாபு நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘யானை முகத்தான்’. 

YaanaiMugathaan

மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன ஊர்வசி, ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

பரத் சங்கர் இசையில் உருவாகும் இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎம் லோகேஷ் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் பாடியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story