தமிழ் புத்தாண்டில் வெளியாகும் யோகிபாபுவின் ‘யானை முகத்தான்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

YaanaiMugathaan

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை முகத்தான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை முகத்தான்’. மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து கருணாகரன், ரமேஷ் திலக், ஊர்வசி, ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

YaanaiMugathaan

பரத் சங்கர் இசையில் உருவாகியுள்ள  இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story