ஒரு தந்தையின் உணர்வுப்பூர்வமான போராட்டம் தான் ‘பொம்மை நாயகி’.. யோகிபாபு பட டிரெய்லர் வெளியீடு !

Bommainayagi

 யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பிரபல காமெடி நடிகரான யோகிபாபு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தனது மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம் இந்த படம். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கியுள்ளார். 

Bommainayagi

இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்திலும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Bommainayagi

தற்போது இந்த படத்தின்  இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரில் தனது மகளுக்காக போராடும் உணர்ப்பூர்வமான தந்தையின் போராட்டம் காட்டப்பட்டுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரை பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.  

 

Share this story