“மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்துள்ளேன்... வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி” - யோகிபாபு

yogibabu

மிகப்பெரிய சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். 

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் முன்னணி இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு, அதிதிபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் படத்தில் நடித்தது குறித்து நடிகர் யோகிபாபு தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் மறந்த வாழ்க்கையை நினைவிற்கு கொண்டு வருபவர் தங்கர் பச்சான். பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அழகி, சொல்ல மறந்த கதை, அப்பாசாமி ஆகிய படங்கள் இதற்கு மிக சிறந்த உதாரணம். 

yogibabu

தனது வழக்கமான பாணியில் எங்களை வைத்து ஒரு குடும்ப கதையை தங்கர் பச்சான் எடுத்திருக்கிறார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆசையாக உள்ளது. தனது படத்திற்காக வேகமாகவும், கோபமாகவும் நடந்துக் கொள்கிறார். அதனால்தான் படத்தின் வேலைகள் சரியாக நடக்கிறது. அவருடன் பணியாற்றியது நிறைய அனுபவங்களை கொடுத்திருக்கிறது. 

இந்த படத்தின் கடைசி வரை எனது கதாபாத்திரம் நகைச்சுவையாக இருக்கும். இதுபோன்று நல்ல கதையோடு, நல்ல படக்குழுவினரோடும் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. மிகப்பெரிய சினிமா ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த இயக்குனர் தங்கர் பச்சானுக்கு நன்றி என யோகிபாபு தெரிவித்துள்ளார். 

 

Share this story