யோகிபாபு படப்பிடிப்புத்தளத்தில் அடித்தடி.. சண்டை முற்றியதால் ஒருவருக்கு மூக்கு உடைப்பு !

யோகிபாபுவின் உதவியாளருக்கு, டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் படப்பிடிப்பு தளமே ரத்தக்களறியானது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது ‘பொம்மை நாயகி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி நடித்து வருகிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை.
இப்படத்தில் அப்பாவாக யோகிபாபுவும், மகளான ஸ்ரீமதியும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி பகுதியில் உள்ள போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் உதவியாளர் சதாம் உசைன் மற்றும் கார் டிரைவர் ராமச்சந்திரன் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் ஆவேசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் அடித்துக்கொண்டனர். இதில் யோகிபாபுவின் மூக்கில் ரத்தம் காயம் ஏற்பட போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.