“ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு”- கேப்டனுக்கு நடிகர் யோகிபாபு புகழஞ்சலி.

photo

கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழகத்தை உலுக்கியது. நல்ல நடிகர், நடிகர் தலைவர், நல்ல அரசியல்வாதி என்பதை தாண்டி அனைவரும் கூறும் ஒரு விஷயம் அவர் ஒரு நல்ல மனிதர் என்பதுதான். அவரது இறப்பிற்கு பல்லாயிரம் மக்கள் கன்ணீர் வடிக்கின்றனர். இந்த நிலையில் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் சினிமா படப்பிடிப்பில் உள்ள பல நடிகர், நடிகைகளும் கேப்டன் குறித்து வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

photo

அந்த வகையில் தற்போது குருவாயூரில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் யோகிபாபு வீடியோ பகிர்ந்துள்ளார் அதில் “ கேப்டனின் மறைவு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இழப்பு, பெருந்தொற்று காலத்தில் அவரை சந்திக்க வேண்டும் என கேட்ட போது எனக்காக நேரம் ஒதுக்கி தன்னை சந்தித்ததாக கூறினார். சுமார் இரண்டு மணுநேரம் அவருடன் நான் உரையாடினேன். நடிப்பி, வாழ்க்கை என பல விஷயங்களை அவர் எனக்கு கற்று கொடுத்தார். அவரது ஆன்மா சந்தியடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்” என கூறியுள்ளார்.


 

Share this story