தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் ‘யோகிபாபு’!..

photo

பிரபல நடிகரான யோகிபாபு தனது தனித்துவமான டைமிங் காமெடி மற்றும் உடல்மொழியால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிவரும் நிலையில் அடுத்து தெலுங்கு பக்கம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

இவர் காமெடியனாக மட்டுமல்ல லீட் ரோலில் நடித்த கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து கூர்கா படத்தில் ஹீரோவாக நடிக்கவே படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் மீண்டும் காமெடி டிடாக்குக்கே வந்து விட்டார். சமீபத்தில் கூட யோகிபாபு காமெடி கேரக்டரில் நடித்த ஜெய்லர் மற்றும் மாவீரன் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் யோகிபாபு பிரபாஸ் அடுத்த நடிக்க உள்ள படத்தின் மூலமாக டோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழில் வங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்க உள்ளாராம்.

Share this story