நாளை ‘மெடிக்கல் மிராக்கள்’ நடக்கப்போகுது... யோகிபாபு பட அறிவிப்பு !

medical miracle

 யோகிபாபுவின் ‘மெடிக்கல் மிராக்கள்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதையம்சத்துடன் யோகிபாபு நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மெடிக்கல் மிராக்கள்’. இந்த படத்தில் யோகி பாபு டாக்ஸி ஓட்டுனராக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்து வருகிறது.  ஏ1 பிரொக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. 

medical miracle

இவர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான், கல்கி, மதுரை முத்து, தங்கதுரை, நாஞ்சில் சம்பத், பாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சித்தார்த் விபின் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். மணிகண்ட ராஜா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

medical miracle

ந்தானத்தின் ஏ1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களை இயக்கிய ஜான்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.  ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story