காமெடி நடிகர் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
காமெடி நடிகர்கள் பலபேர் இன்று ஹீரோவாகி விட்டார்கள் .சந்தானம் முதல் சூரி வரை இந்த காமெடி ஹீரோக்கள் .இந்த வரிசையில் யோகிபாபுவும் ஒருவர் எனலாம் .இவர் ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் நடித்து வருகிறார் .இப்போது இவர் இல்லாத படங்களே இல்லை எனலாம் .ஒரு காலத்தில் லொள்ளு சபாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இவரின் இப்போதைய சொத்துக்கள் பல கோடி .
விஜயின் ஜனநாயகன், ரஜினியின் ஜெயிலர் 2 போன்ற திரைப்படங்கள் யோகி பாபு கைவசம் உள்ளன. இதில் ஜனநாயகன் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இதேபோல் ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகரும் யோகிபாபு தான். நகைச்சுவை நடிகராக நடிக்கும் படங்களுக்கு இவர் ஒரு நாளைக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதே வேளையில் ஹீரோவாக நடித்தால் ஒரு படத்துக்கு 5 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. கடவுள் பக்தி அதிகம் உள்ளதால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் யோகிபாபு. குறிப்பாக இவர் முருகனின் தீவிர பக்தர்.

