வித்தியாசமாக ஸ்னூக்கர் விளையாடிய யோகிபாபு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

yogibabu

 நடிகர் யோகி ஸ்னூக்கர் கேம் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. டைம்மிங் காமெடி, தனித்துவமான தோற்றம், நடிப்புத்திறமை என தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது நடிக்காத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.  அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தனி கவனம் பெறுகின்றன. 

yogibabu

மெர்சல், கோலமாவு கோகிலா, தர்பார், மான் கராத்தே உள்ளிட்ட திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காமெடினாக இருக்கும் அவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.  அந்த வகையில் வெளியான மண்டலோ, பொம்மை நாயகி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

yogibabu

சினிமாவை தவிர விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகர் யோகிபாபு. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார். அந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெறும். இந்நிலையில் நடிகர் யோகிபாபு ஸ்னூக்கர் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஸ்னூக்கர் பந்துகளை சின்ன வயதில் கோலி விளையாடுவது போல விரர்களால் அடித்து விளையாடி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


 

Share this story