யோகிபாபு பட டிரெய்லரை வெளியிடும் முன்னணி ஹீரோக்கள்...

யோகிபாபுவின் ‘லக்கிமேன்’ படத்தின் டிரெய்லரை பிரபல நடிகர்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லக்கிமேன்’. இந்த படத்தில் யோகிபாபுடன் இணைந்து நடிகர் வீரா, ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி. அமித் சாத்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தீப் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதை கண்டறியும் ஒரு மனிதனனின் வாழ்க்கை பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடைபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல நடிகர்களான ஆர்யா மற்றும் அருண் விஜய் வெளியிடவுள்ளனர்.