திடீரென தள்ளி வைக்கப்பட்ட யோகிபாபுவின் 'யானை முகத்தான்'... காரணம் என்ன‌?

yanai mugathaan

 யோகிபாபுவின் 'யானை முகத்தான்' திரைப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'யானை முகத்தான்'. இந்த படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா இப்படத்தை இயக்கியுள்ளார். 

yanai mugathaan

 இந்த படத்தில் கருணாகரன், ஊர்வசி, ஹரீஷ் பெராடி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பரத் சங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

yanai mugathaan

தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதியில் 7-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு பதிலாக ஒரு வாரம் கழித்து வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  ‌ 

 

Share this story