சிங்காரம் படத்தில் நடித்தது பற்றி யோகிபாபு என்ன சொல்கிறார் தெரியுமா ?

yogibabu

யோகி பாபு, வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்சென்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபீதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் நடித்துள்ள படம், ‘சிங்காரம்’. ராக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.எஸ்.ரமணபாலாஜி, பத்மாவதி காந்தி தயாரித்துள்ளனர். கே.வி.கதிர்வேலு எழுதி இயக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். விவேகா பாடல்கள் எழுத, பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். குருராஜ் அரங்குகள் அமைக்க, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்ய, ஃபேன்டம் பிரதீப் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். 

இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ‘கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்த கே.வி.கதிர்வேலு இயக்கிய ‘சிங்காரம்’ படம், நமது சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளை கொண்டிருக்கிறது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவதை மையப்படுத்திய இந்த கதையை பாராட்டுகிறேன்’ என்றார். யோகி பாபு பேசும்போது, ‘இதில் நடிக்க வாய்ப்பு அளித்த கே.வி.கதிர்வேலு, ரமணபாலாஜிக்கு எனது நன்றி. மறைந்த நடிகர்கள் மனோபாலா, மாரிமுத்துவை நினைவுகூறுகிறேன். இப்படத்தை தியேட்டர்களில் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்’ என்றார்.

Share this story