கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த வாரிசு நடிகர்.
1701584388635
கமல் ஹாசனின் அசத்தலான நடிப்பில் தயாராகிவரும் ‘தக் லைஃப்’ படம் அவரது 234வது படமாக தயாராகி வருகிறது. கிட்ட தட்ட 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம்-கமல் கூட்டணி இந்த படத்தில் இணைவதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மல்டி ஸ்டார் படமாக தயாராகும் இந்த படத்தில் துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம்ரவி, அபிராமி ஆகியோர் இணைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் கார்த்திக்கின் மகனும், வளர்ந்து வரும் இளம் நடிகரான கௌதம் கார்த்திக்கும் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கை கடல் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.


