நீண்ட நாள் தோழியை கரம்பிடிக்கும் கவின்... திருமண தேதி அறிவிப்பு !
நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்யவுள்ள நிலையில் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கவின். சின்னத்திரை பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கடந்த 2017-ஆம் ஆண்டு ‘சத்ரியன்’ படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு சென்றார்.
அதன்பிறகு ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானார். பின்னர் ஓடிடியில் வெளியான ‘லிப்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து கடைசியாக அவர் நடித்த ‘டாடா’ மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து புதிய வாய்ப்புகள் அதிகமாக குவிய ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திருமணம் குறித்தும், மணப்பெண் குறித்து புதிய தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை தான் கவின் திருமணம் செய்யவுள்ளார். மோனிகா, தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறாராம். அவர்களுக்கு திருமணம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.