சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த இளம் நடிகர்கள்

coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்தப் படம் ரஜினிகாந்தின் 171 வது படமாகும். இதனை ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

actors

ஆக்சன் கலந்த கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பல பிரபலங்கள் இணைந்திருக்கின்றனர். அதாவது பிகில் படத்தில் நடித்திருந்த ரெபா மோனிகா ஏற்கனவே கூலி படத்தில் இணைந்ததாக தகவல் வெளியானது. அடுத்தது பிரபல இயக்குனர் தமிழ், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர்கள் சந்தீப் கிஷன் மற்றும் வருண் ஆகிய இளம் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் சந்தீப் கிஷன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story