விஜய் படத்தில் இணையும் இளம் நடிகை.. ‘தளபதி 68’ புதிய அப்டேட்

vijay

விஜய்யின் அடுத்த படத்தில் இளம் நடிகை ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வந்த நடிகர் விஜய், அந்த படத்தை முழுவதும் முடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘லியோ’ படத்திற்கு பிறகு ‘மங்காத்தா’, ‘மாநாடு’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

vijay

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், இளமை தோற்றத்திற்கு பிரியங்கா அருள் மோகன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் மாதவன், பிரபுதேவா, ஜெய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vijay

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதையொட்டி படத்திற்கான டெஸ்ட் ஷூட் லண்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.  ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான அப்டேட்டுகள் ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 

vijay

இந்நிலையில் இப்படத்தில் இளம் நடிகையான அபர்ணா தாஸ் இணையவுள்ளார். அவர் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமான அவர், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story