இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர் !

music director raghuram

 இளம் இசையமைப்பாளர் ரகுராம் திடீரென மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக இருந்தவர் ரகுராம். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகி வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதுதவிர ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

music director raghuram

மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-க்கு ஏற்பட்ட ஜெனட்டி நோய் இவரையும் தாக்கியது. இதற்காக அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். மாதம் ஒன்றிற்கு மருத்துவ செலவாக 10 லட்சம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

38 வயதாகும் ரகுராம், நேற்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

 

Share this story