விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன்...நடிகராக அறிமுகமாகும் சமயத்தில் விபத்து...

 விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன்

பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடி எஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன்

கோவைக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது. கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 


விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும், ஆபத்து விளைவிக்கும் வகையில் வண்டி ஓட்டியதாக, டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this story