மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்...

பிரபல யூடியூபர் இர்ஃபான் ரம்ஜானை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய போது மக்களை ஒருமையில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபர் இர்ஃபான் சமீபத்தில் தனது குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டு அதனைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். இது இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்பதால், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது மனைவியின் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கி இர்ஃபான் மன்னிப்பு கேட்டதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரபல யூடியூபர் இர்ஃபானின் இந்த செயல் சரியா? தவறா?
— The karigai (@thekarigai) April 1, 2025
உங்கள் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க...#TheKarigai #Irfansview #Irfan #Ramzan #EidMubarak #ElitePeople pic.twitter.com/QHNQ7fGlcf
ரம்ஜான் பண்டிகையான நேற்று இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று ஏழைகளுக்கு உதவி பொருள்களை வழங்கியதைத் தனது யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.அதில் இர்ஃபான் மற்றும் அவரது மனைவி இருவரும் உணவு மற்றும் பொருட்களை வழங்குகிறார்கள். அப்போது பெண் ஒருவர் உதவி பொருட்களை வேகமாக வாங்கியுள்ளார். இதனால் கோபம் அடைந்த இர்ஃபான், இப்படி அசிங்கமா பண்ணாதீங்கமா.. ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க.. கொடுக்க தானே வந்திருக்கோம்.. ஏன் பிடிச்சு இழுக்குறீங்க என திட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இர்ஃபானை கடுமையாக விமர்சித்து வருகிறனர். தற்பொழுது இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.