டிடிஎப் வாசனின் மஞ்சள் வீரனில் இணையும் 'ராக் ஸ்டார்' அனிரூத் !
யூடியூப்பர் டிடிஎப் வாசன் நடிக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இணையவுள்ளார்.
பிரபல யூடியூப்பராக வலம் வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கு காரணம் வேகமாக பைக் ஓட்டி வரும் அவர், அதை யூடியூப்பில் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது சினிமா படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். 'மஞ்சள் வீரன்' என்ற தலைப்பில் உருவாகும் அந்த படத்தின் அறிவிப்பு டிடிஎப் வாசன் பிறந்தநாளில் வெளியானது.
சமீபத்தில் கையில் சூலத்துடன் பைக் ஓட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக வாசன் இருக்கும் போஸ்டர் வெளியானது. பட்ஜெட் பிலிம் கம்பெனி சார்பில் உருவாகி இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்அம் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓபனிங் பாடல் தாறுமாறாக உருவாகி வருகிறது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளாராம். இது பாடலுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.