யுவனுடன் கூட்டணி அமைக்கும் இயக்குனர் அமீர்.. என்னாவாக இருக்கும் ?

ameer

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இயக்குனர் அமீர் புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கினாலும் ரசிகர்களிடையே இன்றைக்கும் பேசப்படும் இயக்குனராக இருப்பவர் அமீர். சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு ராம், பருத்தி வீரன், ஆதி பகவான் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். 

ameer

பின்னர் படங்கள் இயக்காமல் ‘யோகி’ படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார். நடிப்புக்கு வரவேற்புக்கு கிடைத்ததால் ‘யுத்தம் செய்’, வட சென்னை ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். வட சென்னையில் அவரின் நடிப்பு யாராலும் ஈடு செய்யமுடியாது. அந்த அளவிற்கு நடிப்பு ராட்சஸனாக அந்த படத்தில் நடித்திருந்தார்.   

ameer

கடைசியாக ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள அவர், ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்குனர் அமீர் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் அமீர் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

 

Share this story