யுவன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. ‘இறைவன்’ படக்குழு வெளியிட்ட த்ரில்லர் வீடியோ !

யுவன் பிறந்தநாளையொட்டி ‘இறைவன்’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜன கன மன' படத்தின் இயக்குனர் அகமது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஒரு கொலை சம்பவத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளையொட்டி இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வரவேற்பை பெற்றுள்ளது.
#IRAIVAN Update Coming Tomorrow🔥
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 31, 2023
Stars : Jayam Ravi - Last SulerStar
Music : Yuvan Shankar Raja
Direction : Ahmed (Manithan)
PSYCHO THRILLER On The WAY!!pic.twitter.com/hxMvdccWVL
#IRAIVAN Update Coming Tomorrow🔥
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 31, 2023
Stars : Jayam Ravi - Last SulerStar
Music : Yuvan Shankar Raja
Direction : Ahmed (Manithan)
PSYCHO THRILLER On The WAY!!pic.twitter.com/hxMvdccWVL