பவதாரிணியுடனான நினைவுகளை பகிர்ந்த யுவன்...
1731247808000
தமிழில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்று என்கிற பாடலைப் பாடி தேசிய விருது பெற்றவர் பவதாரிணி. தேன் போன்ற குரலுக்குச் சொந்தக்காரரான இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். விஜய்யின் கோட் படத்திலும் பாட இருந்தவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட சிகிச்சைக்காக இலங்கை சென்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி சிகிச்சை பலன் இன்றி 47 வயதான பவதாரிணி ஜனவரி 25, 2024ல் உயிரிழந்தார். இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் அக்காவுடன் ரெக்கார்டிங் போது எடுக்கப்பட்ட அழகான வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி 3 பேரும் உள்ளனர்.

