யுவன் சங்கர் ராஜாவின் உம்ரா யாத்திரை பயணம்…….வைரலாகும் புகைப்படம்:

yuvan

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ளார்.அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

yuvanshankar

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களுள் ஓர் முக்கியமான இடம் யுவனிற்கு உண்டு. ‘யுவனிசம்” என்ற  பெயரில் இவரது பாடல்களுக்கு என ஒரு ஆர்மியே  இணையத்தில் உலா வருகிறது. யுவன் சங்கர் ராஜா, இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில்  மூன்றாவது முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொள்ள இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை ‘அப்துல் காலில்’ என மாற்றிக்கொண்டார். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

u1

என்னதான் அவர் தனது பெயரை இஸ்லாமிய முறைப்படி மாற்றினாலும், சமூக வலைதளத்தில் யுவன் ஷங்கர் ராஜா என்று தான்  வைத்துள்ளார். இந்த நிலையில் மெக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள  யுவனின் புகைப்படம்   இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  

Share this story