யுவன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிம்பு.. திக்குமுக்காட இருக்கும் ரசிகர்கள் !

HighOnU1

யுவன் நடத்தும் இசை நிகழ்ச்சியில் சிம்பு பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இசை குடும்பத்தை சேர்ந்த அவரின் இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அவர் தான் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது. 

HighOnU1

சினிமாவை தவிர இசை நிகழ்ச்சிகளையும் யுவன் நடத்தி வருகிறார். உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் யுவனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த வகையில் யுவனின் இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 15-ஆம் தேதி மலேசியாவில் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற பெயரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

HighOnU1

இந்த இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம் வழுதி, கவிதா சுகுமார் ஆகியோர் பெரும் பொருட்செலவில் நடத்துகின்றனர். இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளவுள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மலேசியாவிற்கு பிறகு அமெரிக்காவின் 6 மாநகரங்களில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

Share this story