ஆதிபுருஷ் படத்தின் பிரபாஸுக்கு ஜோடியாக சீதையாக நடிக்கப்போவது இந்த நடிகை தான்!
பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கஉள்ளார். இந்தப் படம் சரித்திர புராணமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
3டி டெக்னாலஜியில் உருவாகவிருக்கும் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் சைப் அலி கான் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.
சீதையாக யார் நடிப்பது என்றுதான் குழப்பம் நிலவி வந்தது. முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. பின்னர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது நடிகை க்ரித்தி சானோன் இப்படத்தில் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிப்பதால் க்ரித்தி சானோன் தான் சீதையாக நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பாலிவுட் நடிகர் சன்னி சிங் நடிக்க லட்சுமணன் கதாபாத்திரத்தில் பிரபாஸின் தம்பியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஹுபலி படம் ஏற்கனவே மெஹாஹிட் அடித்துள்ளதால் இந்தப் படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.