‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரானா… மருத்துவமனையில் அனுமதி…

‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரானா… மருத்துவமனையில் அனுமதி…

‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரானா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரானா… மருத்துவமனையில் அனுமதி…

மாநகரம்’, ‘கைதி’, படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ இயக்கினார். சூப்பர் ஹிட்டடித்த இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது முன்னணி இயக்குனராக வலம் லோகேஷ், கமல் வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. கமல் அரசியலில் தீவிரமாக உள்ள நிலையில் தேர்தல் முடிந்து படத்தை துவங்குவதற்காக வேகமாக பணிகளை லோகேஷ் கனகராஜ் செய்து வந்தார் .

இதற்கிடையே கடந்த 14ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது சர்ப்ரைசாக முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்தபாலன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து லோகேஷ் கனகராஜு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரானா… மருத்துவமனையில் அனுமதி…

இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு கொரானா தொற்று பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் நான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என் உடல்நலனை நன்கு கவனித்துக்கொள்வேன். விரைவில் நலம் பெற்று பூரண குணமடைந்து திரும்பி வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பிரபலங்களும், ரசிகர்களும் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share this story