லூசிஃபர் ரீமேக்கில் ‘மெகா ஸ்டார் சிரஞ்சீவி’- முதலமைச்சர் மகளாக நடிக்கிறார் ‘நயன்தாரா’

லூசிஃபர் ரீமேக்கில் ‘மெகா ஸ்டார் சிரஞ்சீவி’- முதலமைச்சர் மகளாக நடிக்கிறார் ‘நயன்தாரா’

மலையாளத்தில் மாபெரும் வெற்றிப்பெற்ற லூசிபரின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா எடுக்கிறார்.

மோகன்லால் அரசியல்வாதியாக நடித்த லூசிஃபர் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. லூசிஃபர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை முத்தொகுப்பாகத் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பிருத்விராஜ்.

லூசிஃபர் ரீமேக்கில் ‘மெகா ஸ்டார் சிரஞ்சீவி’- முதலமைச்சர் மகளாக நடிக்கிறார் ‘நயன்தாரா’

ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பெயரில் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது இப்போது ட்ரெண்ட். மலையாள பட உலகிலும் இந்த ட்ரெண்ட் இப்போது உருவாகிறது. இத்திரைப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், இந்திரஜித், டோவினோ தாமஸ் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

லூசிஃபர் ரீமேக்கில் ‘மெகா ஸ்டார் சிரஞ்சீவி’- முதலமைச்சர் மகளாக நடிக்கிறார் ‘நயன்தாரா’

இந்நிலையில், லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியிருந்தார். இந்தப் படத்தை விவி விநாயக் இயக்குவார் என முதலில் தகவல்கள் வெளியாயின. பின்னர், சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்குவார் என்று கூறப்பட்டது.பின்னர் அவர் விலகி விட்டதாகவும் விவி விநாயக்கே இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இயக்குனர் மோகன் ராஜா இயக்குவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கில் இருந்து பல படங்களை தமிழில் ரீமேக் செய்துள்ள மோகன் ராஜா, இந்தி படமான அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் அந்தப் படத்தில் இருந்து அவர் திடீரென விலகினார்.

இப்போது நடிகர் சிரஞ்சீவி ஆச்சாரியா படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு லூசிஃபர் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

லூசிஃபர் ரீமேக்கில் ‘மெகா ஸ்டார் சிரஞ்சீவி’- முதலமைச்சர் மகளாக நடிக்கிறார் ‘நயன்தாரா’

இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது அவர் முதலமைச்சரின் மகள் வேடத்தில் நடிக்கிறாராம். ஒரிஜினலில் அந்த கேரக்டரில் மஞ்சுவாரியர் நடித்திருந்தார். வில்லன் மனைவியாக நடித்திருந்தார். அந்த கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story